டிசம்பர் 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செய்தித் தொகுப்பு
- டிசம்பர் 30: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் பல்வேறு மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
- டிசம்பர் 28: எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
- டிசம்பர் 21: ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் வரதர் தனது 83ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
- டிசம்பர் 14: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனது 68 ஆவது வயதில் லண்டனில் காலமானார். இவர் அண்மைக் காலத்தில் புற்று நோய்க்கும், 90களிலிருந்து நீரழிவு நோய்க்கும் உட்பட்டிருந்தார்.
- டிசம்பர் 9: ஈழத்துக் கவிஞர் சு. வில்வரத்தினம் தனது 56ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.
- டிசம்பர் 1: விக்கி செய்திகள் ஆரம்பம்.
- டிசம்பர் 1: 15ஆவது ஆசிய விளையாட்டுக்கள் தோஹாவில் தொடக்கம்.