Wikipedia பேச்சு:தமிழ் இலக்கணக் கையேடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிகவும் பயனுள்ள வேலை. நன்றி நற்கீரன். Mayooranathan 18:46, 6 ஜனவரி 2006 (UTC)
- அவசியமான பக்கம். இங்குள்ள அனைவரும் மாணவர்களே!! ஆழுமையுடன் எழுதுவது, ஆளுமையுடன் எழுதுவது- இவற்றில் எது சரி?--ரவி 14:28, 7 ஜனவரி 2006 (UTC)
ஆளுமையுடன் எழுதுவது என்பதே சரி.?--kalanithe
பொருளடக்கம் |
[தொகு] இலக்கண கேள்வி பதில்
[தொகு] ஓர் எதிர் ஒரு
ஓர் எதிர் ஒரு, வித்தியாசத்தை விளக்குவீர்களா? நன்றி. --Natkeeran 03:05, 29 மார்ச் 2006 (UTC)
- உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் வரும்போது ஓர் என்று வரும் (எ.கா: ஓர் அறிஞன், ஓர் உழவன்). ஏனைய சொற்களுக்கு முன் ஒரு என்றே வரும் (எ.கா: ஓரு மனிதன், ஒரு வீடு). Mayooranathan 17:15, 29 மார்ச் 2006 (UTC)
-
- விளக்கத்துக்கு நன்றி.--Natkeeran 16:47, 31 மார்ச் 2006 (UTC)
[தொகு] ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள்
[தொகு] பொதுவான பிழைகள்
- முயல் என்னும் வினை முயல்கிறேன், முயன்றேன், முயல்வேன் என்பன பலவாறு பயன்படும் ஒரு சொல். முயல் என்பதில் இருந்து முயற்சி என்று ஒரு பெயர்ச்சொல் எழும். இந்த பெயர்ச்சொல்லை மிகவும் தவறாக பெரும் எழுத்தாளர்கள் முதல் அறியாதவர்கள் வரை பலரும் முயற்சிக்கிறேன், முயற்சித்தேன் என தவறாக பயன்படுத்துகின்றனர். பயில் -> பயிற்சி என்பது சரி, பயிற்சித்தேன் என்பது தவறு. பிறவினை ஆட்சி பயிற்றுவித்தான் என்பன போன்றவை. பிற வடிவங்களும் உண்டு. ஆனால் பயிற்சித்தேன் என்பது தவறு. முயற்சித்தேன் என்பது தவறு.
- பரினாமம் - evolution; பரிமாணம் - dimension