தாவர உண்ணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது விலங்குகளில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக சிங்கம் (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
[தொகு] இவற்றையும் பார்க்க
- ஊன் உண்ணிகள்
- பூச்சி உண்ணிகள்
- யாவும் உண்ணிகள்
- மீன் உண்ணிகள்