தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெற்காசியாவில் உள்ள நாடுகள் கலந்து கொள்வதற்கான பல்-விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வேண்டும் என்றாலும், இப்பகுதியில் நிலவும் நிலையற்ற அரசியல் தன்மையால், பலமுறை இந்நிகழ்வுகள் ஒத்திப்போடப்பட்டதுமுண்டு. கடைசியாக, பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 18, 2006 முதல் ஆகஸ்ட் 28, 2006 வரை கொழும்பில் நடைபெற்றன. அடுத்து, இப்போட்டிகள் டாக்காவில் 2008ல் நடைபெறவுள்ளன.
வங்காளதேசம், நேபாளம், இந்தியா, மாலைதீவுகள், இலங்கை, பாக்கிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகள் நல்லெண்ண அடிப்படையிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த நாடுகளாகும். 2006ல் ஆப்கானிஸ்தானும் இப்போட்டிகளில் சேர்ந்து கொண்டது.