தொடுகோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தொடுகோடு என்பது ஒரு வளைகோட்டை ஒரு புள்ளியில் தொடும் ஒரு நேர்க்கோடு ஆகும். வளை கோட்டைத் தொடும் இடத்தில் அத் தொடுகோட்டுக்கு செங்குத்தாக ஒரு கோடு வரைந்தால் அதுவே அவ்விடத்தில் அவ் வளைகோட்டின் செங்குத்துக் கோடுசெங்குத்துக் கோடும் ஆகும். அதாவது தொடுபுள்ளியில் வளைகோடு எச்சாய்வு கொண்டூள்ளதோ அதே சாய்வுதான் தொடு கோடும் கொண்டுள்ளது. இந்த தொடுகோடு என்னும் கருத்துரு வடிவவியலிலும், கணிதத்திலும் மிகவும் அடிப்படையானது. பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படத்தின் உதவியுடன் கருத்தை மேலும் விளக்கிக் கொள்ளலாம்.