தொன்மைப்பொருளியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொன்மைப்பொருளியல் (Classical economics) என்பது முதன்மையாக தோற்றுவிக்கப்பட்ட நவீன பொருளியல் சிந்தனை கருத்துக்களாகும். அடம் ஸ்மித்,டேவிட் ரிக்கார்டோ, தோமஸ் மால்துஸ்,ஜோன் ஸ்ருவார்ட் மில் போன்ற பொருளியலாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொன்மைப் பொருளியலாக கொள்ளப்படும். இவர்கள் தவிர பின் வந்த வில்லியம் பிர்ரி, Johann Heinrich von Thünen,கெய்ன்ஸ், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் மேற்கூறப்பட்ட பொருளியலளர்களின் கருத்துக்களை மேலும் தங்களது ஆய்வுகளின் மூலம் விரிவாக்கி மேம்படுத்தினார்கள்.
1776ம்,வெளியிடப்பட்ட அடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வங்கள் (The Wealth of Nations) எனும் நூலே தொன்மைப் பொருளியல் கருத்துக்களின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுகின்றது. 19ம் நூற்றாண்டில் செயற்பாடுடையாதாக காணப்பட்ட தொன்மைப்பொருளியல் கருத்துக்கள் பின்னர் புதிய தொன்மைப் பொருளியலாக (neoclassical economics) மாற்றமுற்றது.
தொன்மைப்பொருளியலாளர்கள் (Classical economists) வளர்ச்சி,அபிவிருத்தி என்பன குறித்து விளக்கமளிப்பதில் பெரிதும் முயற்று அவற்றில் பகுதியளவான வெற்றியும் பெற்றுள்ளனர். தொழிற்புரட்சி காரணமாக நிலமானிய சமுதாய அமைப்பு முதலாளித்துவ சமூகமாக மாற்றம் கொள்ளத் தொடங்கிய காலகட்டத்திலே இவர்களுடைய உன்னதமான செயலூக்கமுள்ள கருத்துகளை வெளியிடபட்டன. அத்துடன் ஆட்சியாளரின் விரும்பம் சாராமல் பொருளியல் கருத்துக்களை வெளியீடும் வந்தனர்.உதாரணமாக அடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் என்பதை அரச கருவூலத்திற்கு மாற்றாய் வருடாந்த தேசியவருமானத்தை கொள்கின்றமை இங்கே குறிப்பிடதகுந்த விடயங்களுல் ஒன்றாகும்.
[தொகு] இலக்கியம்
- Samuel Hollander - Classical Economics (Oxford: Blackwell, 1987)