பொருளியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளியல் என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும். உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் ஸ்மித்தின் என்பாரின் வெல்த் ஆஃவ் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூல் வெளிவந்த பின்னரே அது பொருளியல் என ஒர் குமுகம் பற்ரிய அறிவிய துறையாகவும் மரபாக புத்தாக்கம் பெற்றது.
பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொர் காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள்(1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:
"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகள் நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்." (the science which studies human behaviour as a relationship between ends and scarce means which have alternative uses).
இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை ) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்கள் மாற்றுப்பயன்பாடு அற்றபோதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது.
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியது சிற்றினப்பொருளியல் , பேரினப்பொருளியல் ( macroeconomics) என்பனவாகும். இவைதவிர நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics), கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics), சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics) என பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள்
பொருளியல் என பலராலும் முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணம் பற்றி இப்பந்தி விரிவாக பார்க்கின்றது.