தோசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தோசை என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த தோசை.
தோசையினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன.
[தொகு] வகைகள்
தோசையில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:
- மசால் தோசை
- வெங்காய தோசை
- முட்டை தோசை
- ரவா தோசை
[தொகு] செய்முறை
தேவையான பொருட்கள் :
- புழுங்கல் அரிசி - 400 மில்லிகிராம்
- உளுத்தம்பருப்பு - 100 மில்லிகிராம்
- உப்பு - தேவையான அளவு
- ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
- அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
- அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
- தோசைக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
- புளித்த மாவினை தோசைக் கல்லில் ஊற்றி தாள் போல் தேய்த்து சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும்.
![]() |
|