பஞ்ச பாத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது. இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அவையாவன துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி என்பனவே.