பரத்பூர் தேசியப் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரத்பூர் தேசியப் பூங்கா இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தானில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது.
இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் இங்கே பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட சிறிய பூங்காவான இங்கே 300 க்கு மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும்.