பஹாய் சமயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"1844ம் ஆன்டில் பாரசீக நாட்டில் உதித்த பஹாய் சமயம் இன்று குறைந்தது 300க்கும் அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் சுமார் 65 லட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான உலகளாவிய சமயமாகும். பஹாய்கள் இன்று உலகம் முழுவதும் 120,000க்கும் அதிகமான உள்ளூர் சமூகங்களில் வசித்து வருகின்றனர்."
"பஹாய் சமயத்தை வெளிப்படுத்தியவரின்பெயர் பஹாவுல்லா. “பஹாவுல்லா”என்பதன் மொழியாக்கம், “இறைவனின் ஓளி”அல்லது “தேஜஸ்” என்பதாகும். பஹாவுல்லா, இவ்வுலக மாற்றங்களும் வாய்ப்புக்களும் மட்டுமே வாழ்வு என்பதல்ல எனவும், ஆன்மாவில் ஏற்படும் வளர்ச்சியே அதன் உண்மையான சிறப்பு எனவும், மனித வாழ்வு, அதாவது ஆன்மாவின் வாழ்வு இவ்வுலகின் ஒரு குறுகிய காலத்தில் நடைபெற்று இறைவனின் வெவ்வேறு உலகங்களில் என்றும் நிலையாகத் தொடர்கின்றது எனவும் போதித்தார். பஹாவுல்லாவின் செய்தியின் சாரம் மனுக்குல ஒற்றுமை குறித்ததாகும். கடவுள் ஒருவரே எனவும், மனுக்குலம் ஒன்றே எனவும், உலக சமயங்கள் அனைத்தும் ஒரே உதயபீடத்தைக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் போதித்தார்."