பாண்டிச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாண்டிச்சேரி (ஆங்கிலம்: Pondicherry) எனவும் புதுச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், தென்னிந்தியாவில், தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் இருந்து 170 கல் தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த அழகான, அமைதிப் பூங்காவான இடம். அத்துடன் இது புதுவை மாநிலத்தின் தலைநகரும் கூட. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.
[தொகு] புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி
புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.
புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | ![]() |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூர் | போபால் | புவனேஸ்வர் | சண்டிகர் | சென்னை | டாமன் | தேஹ்ராதுன் | தில்லி | திஸ்பூர் | காந்திநகர் | கேங்டாக் | ஹைதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவராத்தி | கோஹிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பனாஜி | பாட்னா |பாண்டிச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | ஷிம்லா | சில்வாசா | ஸ்ரீ நகர் | திருவனந்தபுரம் |