பூச்சிக்கொல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூச்சி கொல்லி அல்லது பூச்சி நாசினி என்பது, மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பதார்த்தத்தையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பதார்த்தங்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் குடம்பிகளையோ அழிக்கவல்லவை. பூச்சிக் கொல்லிகள், வேளாண்மை, மருத்துவம், தொழில்துறை ஆகியவற்றிலும், வீடுகளிலும் பயன்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் வேளாண்மை உற்பத்தியின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய காரணம் இதன் பயன்பாடே எனக் நம்பப்படுகின்றது. ஏறத்தாழ எல்லாப் பூச்சிக்கொல்லிகளுமே வாழ்சூழல் முறைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கக் கூடியவை. இவற்றுட் பல மனிதரையும் பாதிக்கக்கூடிய அளவு நச்சுத்தன்மை கொண்டவை. இவ்வாறான நச்சுப்பொருட்கள், உணவுச் சங்கிலியில் செறிவடைந்து வருகின்றன.