Wikipedia:பெயரிடல் மரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- விக்கிபீடியாவைப் பயன்படுத்துவதற்கான விளக்கப் பக்கங்களின் பெயர்கள் "விக்கிபீடியா:" என்று தொடங்கவேண்டும்.
- விக்கிபீடியா:தேடல் உதவி - சரியான பெயரிடல் மரபு.
- தேடல் உதவி - தவறான பெயரிடல் மரபு.
- விக்கிபீடியா பக்கங்களின் பெயர்கள் / (கட்டுரைத்தலைப்புகள்)
-
- தமிழில் இருக்க வேண்டும்.
- ஏ. ஆர். ரஹ்மான் - சரியான பெயரிடல் மரபு.
- A. R. Rahman - தவறான பெயரிடல் மரபு.
-
- கூட்டுப் பெயர்கள் பொதுவாக பன்மையில் இருக்க வேண்டும், மற்ற தலைப்புகள் ஒருமையிலேயே இருக்க வேண்டும்.
- ஆழ்வார்கள் - சரியான பெயரிடல் மரபு.
- ஆழ்வார் - தவறான பெயரிடல் மரபு.
- ஏரி - சரியான பெயரிடல் மரபு.
- ஏரிகள் - தவறான பெயரிடல் மரபு.
-
- தெளிவாக இருக்க வேண்டும்.
- ரோஜா (மலர்) - சரியான பெயரிடல் மரபு.
- ரோஜா (திரைப்பட நடிகை) - சரியான பெயரிடல் மரபு.
- ரோஜா (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
- தமிழ் இலக்கியம் என்ற தலைப்புடைய நூல் குறித்த கட்டுரையின் தலைப்பு, தமிழ் இலக்கியம் (நூல்) என்று இருத்தல் வேண்டும்; இவ்விடத்தில், தமிழ் இலக்கியம் என்ற கட்டுரைத் தலைப்பு குழப்பம் விளைவிப்பதாகவும் கட்டுரை உள்ளடக்கம் குறித்த தவறான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும்.
-
- முதலெழுத்துப் புள்ளிக்கு அடுத்து வெற்றிடம் விடுக
- ஈ. வெ. ராமசாமி - சரியான பெயரிடல் மரபு.
- ஈ.வெ.ராமசாமி - தவறான பெயரிடல் மரபு.
- ஈ. வெ.ராமசாமி - தவறான பெயரிடல் மரபு.
-
- கூடுமான வரை பட்டப் பெயர்களை தவிர்க்கவும்
- ஜெ. ஜெயலலிதா - சரியான பெயரிடல் மரபு.
- புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா - தவறான பெயரிடல் மரபு.
-
- கூடிய மட்டிலும் மூல மொழியின் பலுக்கலுக்கு (அல்) உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழ் ஒலிபெயர்ப்பும் இருத்தல் வேண்டும்.
- ரொறன்ரோ-சரியான பெயரிடல் மரபு (இலங்கை).
- டொராண்ட்டோ-சரியான பெயரிடல் மரபு (தமிழ் நாடு)
- ரொரன்ரோ-தவறான பெயரிடல் மரபு.
- ரொரன்டோ-தவறான பெயரிடல் மரபு.
- ரொரண்டோ-தவறான பெயரிடல் மரபு.
- ரொறன்டோ-தவறான பெயரிடல் மரபு.
- ரொறண்டோ-தவறான பெயரிடல் மரபு.
-
- பட்டப்பெயர்களை இராணுவ தரங்களை தலைப்புக்களில் தவிர்க்க.
- லெப்டினன் கேணல் திலீபன் - தவறான பெயரிடல் மரபு.
- திலீபன் - சரியான பெயரிடல் மரபு.
-
- அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம்.
- பிற மொழி வணிகப் பெயர்கள், நூட்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்.
- கூகுள் எர்த் - சரியான பெயரிடல் மரபு.
- கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
- லைஃவ் இஸ் பியூட்டிஃவுல் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
- வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :)!.
மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவரும் பிறமொழித் திரைப்படங்களின் தமிழ்ப்பெயர்கள் பரிச்சயமாக இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதாலும் தவிர்க்கலாம்.
- ஷவோலின் சாக்கர் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
- மிரட்டல் அடி (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :) - தமிழாக்கப்பட்டு வெளிவரும் திரைப்படங்களுக்கு வணிகக்காரணங்களுக்காக வேடிக்கையான மூலத் திரைப்படத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெயரிடுவது உண்டு. அவற்றை தவிர்க்கலாம்.
மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவந்து தமிழ்ப்பெயரிலேயே பிரபலமான நூட்களுக்கு மட்டும் தமிழ்ப் பெயரிலேயே கட்டுரை தொடங்கலாம்.
- சத்திய சோதனை - சரியான பெயரிடல் மரபு.
- இந்தியக் கண்டுபிடிப்பு - தவறான பெயரிடல் மரபு :) (இப்படி Discovery of india நூலின் பெயரை தமிழாக்கலாம் என்று கொள்ளும்பட்சத்தில்!)