பெர்னாவோ டி குவைறோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெர்னாவோ டி குவைறோஸ் போத்துக்கல் நாட்டின் "எண்ட்றே டூரோ இ மின்ஹோ" என்ற மாகாணத்திலுள்ள "அமரந்தே" என்னுமிடத்தில் 1617 ஆண்டு பிறந்தார். 1635 ல் இந்தியாவை நோக்கிப் புறப்பட்ட 30 யேசுசபை சமய பொதகர்களுள்(மிஷனரிகளுள்) ஒருவராக லிஸ்பனிலிருந்து பயணத்தை ஆரம்பித்தார். அதே ஆண்டு நவம்பரில் கொச்சி வந்து சேர்ந்த இவர் டிசம்பரில் கோவாவைச் சென்றடைந்தார். கோவாவில் இவர் தத்துவம், வேதாந்தம்(theology) ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் 1680 ஆம் ஆண்டுவரை வேதாந்தத்(Theology) துறைப் பேராசிரியர், Vice-Rector, Rector, பங்கு குருவானவர், புரொவின்ஷல் போன்ற பல பதவிகளையும் வகித்த இவர் 1688 ஏப்ரல் 10 ஆம் திகதி கோவாவில் காலமானார். இவர் 1635 முதல் 1688 வரை தொடர்ச்சியாக 53 வருடகாலம் இந்தியாவில் வசித்தார்.
தந்தை குவைறோஸ் பல நூல்களை எழுதினார். எனினும் அச்சேற முன்னமே ஒன்றைத் தவிர ஏனையவை 1664 ல், யேசுசபையினரின் சென். போல்ஸ் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்து போயின. இவர் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுள், 'யேசுசபையைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய சகோதரர் பெட்ரோ டி பாஸ்தோவின் வாழ்க்கை' என்னும் நூலும் The Temporal and Spiritual Conquest of Ceylon என்னும் நூலும் பிரபலமானவை.