மக்னீசியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மக்னீசியம் ஒரு தனிமம் ஆகும். இது என்ற குறியீட்டால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. இது புவியில் அதிகம் கிடைக்கும் தனிமங்களில் எட்டாவது ஆகும். புவி ஓட்டின் எடையில் இது 2% ஆகும்.
[தொகு] மனித உடலில் மக்னீசியத்தின் பங்கு
பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350mgக்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும் ஏற்படும்.