மின்னழுத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மின்னழுத்தம் என்பது மின் தன்மை உள்ள பொருள்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோடையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு மேலே உள்ள நீரின் அழுத்ததால் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும் நிலவீர்ப்பு அல்லது புவியீர்ப்பு விசை இருப்பதால்தான். இதே போல, மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருள்களைச்சுற்றி மின் விசை தரும் மின்புலம் உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த மின்னழுத்தம் எழுகின்றது. இந்த மின்னழுத்தத்தால் மின்னோட்டமும் உண்டாகும். நம் வீடுகளில் மின் விளக்கு எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.
மின்னழுத்தை வோல்ட்டு என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 ஓம் கொண்ட தடையத்தின் இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 ஆம்பியர் அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னொட்டம், தடைமம் இவற்றினிடையே உள்ளத் தொடர்பை 'கியார்கு ஓம் என்பாரின் ஓமின் விதியால் அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (தடைமம்) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி,
V = மின்னழுத்தம் R = தடைமம் I = மின்னோட்டம் என்றால், V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.
[Simple equations and more explanation needed; more illustrative diagrams needed]
[தொகு] நுட்பியல் சொற்கள்
- மின்புலம் - Electric Field