ஓமின் விதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாறா வெப்பநிலையில், ஒரு கடத்தியின் (எ.கா. உலோகங்கள்) இருமுனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடானது (V) அக்கடத்தியின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் (I) அளவிற்கு நேர் சார்புடையதாகும். வேறுவிதமாகக் கூறுவதென்றால், மின்னழுத்த வேறுபாட்டிற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான விகிதம் ஓர் மாறா எண் ஆகும். இம் மாறா எண்ணே மின் தடை எனப்படும்.
- V = IR
இங்கு R என்பது கடத்தியின் மின் தடைமப் பண்பாகும், கடத்தியின் மின்தடை என்பர்.
இதை ஜார்ஜ் ஓம் (Georg Ohm) என்ற அறிஞர் 1827 இல் விளக்கிக் கூறினார்.
மின்தடையின் அலகு ஓம் (Ohm) ஆகும் . இது வோல்ட்டு/ஆம்ப்பியர் (volt/ampere), அல்லது (வோல்ட்டு-நொடி/கூலாம்) (volt-second/coulomb)ஆகியவற்றுக் கு இணையானது.
[தொகு] வெளி இணைப்புகள்
- Calculation of Ohm's law · The Magic Triangle (ஆங்கிலப் பக்கம்)
- Calculation of electric power, voltage, current and resistance (ஆங்கிலப் பக்கம்)