மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காக விநியோகிக்கப்படும் அலுவலகப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல் மற்றும் தொடர்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் இருந்து லோட்டஸ் சாப்ட்வேர் (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் லோட்டஸ் 1-2-3 மென்பொருளை மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளோடு சந்தைப் படுத்தி வெற்றிகொண்டது.
[தொகு] வரலாறு
ஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது டாஸ் இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும் செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். போர்லாண்ட் நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. 1998 எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2003 தவிர எக்ஸெல் 2007, ஜனவரி 2007 இல் வெளிவர இருக்கின்றது. இதன் தற்போதைய போட்டியாளர்களாக கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ் மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. லினக்ஸ் இயங்குதளத்தில் ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.
1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ வைரஸ் பரவலிற்கும் காரணமாக அமைந்தது.
மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும்.
[தொகு] தமிழ் மற்றும் இந்திய மொழிகளின் ஆதரவு
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் Sort பண்னக் கூடியவையே. கண்ட்ரோல் பனலூடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழ்ழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியை டாலரில் இருந்து ரூபாயிற்கு மாற்றவியலும்.
குறிப்பு: Sorting தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை மற்றும் பாமினி போன்ற எழுத்துக்களில் செய்யவியலாது
[தொகு] இவறையும் பார்க்க
- மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்
- மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயிற்சி
- தமிழ் மூலம் எக்செல் - றமணன் - குவிக்ரெக் அக்கடமி கொழும்பு, இலங்கை