ரோஜர் கோர்ன்பெர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் (பி. 1947) அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிஸ்சௌரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் என்னும் ஊரில் பிறந்தார். இவர் 2006ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்று புகழ் படைத்த அறிஞர். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டன்ஃவோர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் செய்த ஆய்வுகளின் பயனாய் எவ்வாறு பல கண்ணறைகள் (செல், cell) கொண்ட யூகார்யோட் (Eukaryotic) வகை உயிரினங்களில், ஈரிழை டி என் ஏ (DNA) வானது ஓரிழை ஆர் என் ஏ (RNA)வாக, அடிப்படை மூலக்கூறு இயல்பின் அடிப்படையில் மாறுகின்றது என்று அறிய இயன்றது. இவ்வாய்வுகளுக்காக 2006ஆம் ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பேராசிரியர் ரோஜர் கோர்ன்பெர்க்கின் தந்தையார் ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் 1959ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. தந்தை ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் ஸ்டான்ஃவோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை வரலாறு
ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1967ல் பட்டம் பெற்றார். பின்னர் 1972ல் ஸ்டான்ஃவோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில், மருத்துவ ஆய்வுக் குழுவில் மேல்முனைவர் நிலை ஆய்வுகள் நடத்தினார். 1976ல்ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியல் துறையில் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1978ல் ஸ்டான்ஃவோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் கட்டமைப்புத் துறையில் பேராசிரியராக மீண்டு வந்து சேர்ந்தார். 1984-1992 காலப்பகுதியில் ஸ்டான்ஃவோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.
[தொகு] நோபல் பரிசு
[தொகு] பட்டங்களும் பரிசுகளும்
- 1997: ஹார்வி பரிசு (Harvey Prize from the Technion)
- 2002: ASBMB-மெர்க் பரிசு (ASMB-Merck Award)
- 2002: புற்றுநோய்த்துறை ஆய்வுக்காக பாசரோவ் பரிசு (Pasarow Award)
- 2002: சார்லே லியோபோல்ட் மாயர் பரிசு ( Le Grand Prix Charles-Leopold Mayer)
- 2005: ஜெனெரல் மோட்டார் புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் ஆல்ஃவ்ரட் பி ஸ்லோன் ஜூனியர் பரிசு
- 2006: நோபல் பரிசு
[தொகு] வெளி இணைப்புகள்
- ரோஜர் கோர்ன்பெர்க் ஆய்வுச்சாலை
- கோர்ன்பெர்க் அவர்களின் ஆய்வு வெளியீடுகள்
- நோபல் நிறுவனத் தளம்
- அரச ஸ்வீடிஷ் அறிவியல் உயர்கல்வி நிறுவனம்
- குறும் வாழ்க்கை வரலாறு
- மேலும் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
- பிபிசி செய்தி