வளைவுந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வளைவுந்தம் என்பது ஒரு புள்ளியை நடுவாகக் கொண்டு ஒரு பொருள் வளைந்து செல்லும் பொழுது, அப்பொருள் கொண்டிருக்கும் உந்தம் ஆகும். இதனைக் கோண உந்தம் என்றும் சொல்வர். வேறு புற முறுக்குவிசை ஏதும் அப்பொருளின் மீது இயங்காதிருக்கும் வரையிலும், அப்பொருள் அதே வளைவுந்தம் பெற்றிருக்கும்.
வளைவுந்து என்னும் இக்கருத்தானது அணுக்களின் உட்கூறாய் உள்ள நேர்மின்னி (இலத்திரன்), அணுக்கருவைச் சுற்றி வருவதில் இருந்து கோள்களும், விண்மீன்களும் அண்டவெளியில் சுற்றுப்பாதைளில் நகர்வது வரை மிகப்பலவற்றைப் பற்றிக் கணிக்கப் பயன்படுவதாகும்.
வளவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாக்கக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் வளைவுந்தானது
- அப்பொருளின் திணிவுக்கும் (பொருண்மைக்கும்),
- அது நகரும் விரைவுக்கும்,
- அது அச்சுப்புள்ளியில் இருந்து விலகி இருக்கும் தொலைவுக்கும்
தொடர்புடையது.
எனவே திணிவு, விரைவு, விலகு தொலவு ஆகிய மூன்றும் வளவுந்தத்தைக் கணிக்கத் தேவைப்படும். ஒரு பொருள் ஓர் அச்சுப் புள்ளியை நடுவாகக் கொண்டு வளைந்து செல்லும் பொழுது அதன் வளைவுந்தமானது அச்சுப் புள்ளியும் வளைந்து செல்லும் பாதையும் அமைந்த தளத்திற்குச் செங்குத்தான திசையில் இயங்கும்.
இவ் வளைவுந்தானது இயற்பியலில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது முழு இயக்க அமைப்பொன்றில் புற முறுக்குவிசை ஏதும் இல்லை எனில் மாறாதிருக்கும் அளவுப்பொருளாகும். இதற்கு வளைவுந்தம் மாறாக் கொள்கை என்று பெயர். முறுக்குவிசை என்பது காலத்தால் வளைவுந்தம் மாறுபடும் விரைவு. அதாவது ஒரு நொடிக்கு வளைவுந்தம் எவ்வளவு மாறுகின்றது என்பதாகும்.
[தொகு] வரையறை
ஓர் அச்சுப்புள்ளியை நடுவாகக் கொண்டு வளைந்து செல்லும் ஒரு பொருளின் வளைவுந்தத்தை L என்று கொள்வோம். நடுப்புள்ளியில் இருந்து பொருள் விலகி இருக்கும் தொலைவை விலகுத்தொலவு நெறிமம் ("திசையன்") (vector) r எனக் கொள்வோம். பொருளின் திணிவு (பொருண்மை) m எனக் கொள்வோம். நகரும் பாதையில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் அப்பொருளின் நேர் விரைவு v எனக்கொள்வோம். பொருளின் நேர்திசை உந்தம் p (= mv) எனக் கொண்டால், வளைவுந்தம் L என்பதைக் கீழ்காணுமாறு கணிதக் குறியீடுகள் வழி விளக்கப்படும். பெருக்கல் குறியானது குறுக்கு நெறிமப் பெருக்கலைக் குறிக்கும் (நெறிமம் = திசையன்). எனவே L இன் திசையானது r, p ஆகிய இரண்டு நெறிமங்களும் இருக்கும் தளத்திற்குச் செங்குத்தான திசையில் இருக்கும்.
- என்பது பொருளின் வளைவுந்தம்.
- என்பது பொருளானது நடுப்புள்ளியில் இருந்து விலகி உள்ள தொலைவு. இது ஒரு விலகு தொலைவு நெறிமம் (vector).
- என்பது பொருளின் நேர்திசை உந்தம்.
- என்பது குறுக்குப் பெருக்கு அல்லது புறப் பெருக்கு என்னும் நெறிமப் பெருக்கு.
வளவுந்தத்தின் SI அலகுகள் நியூட்டன்.மீட்டர்.நொடி (N•m•s); அல்லது கிலோ.கி. மீ2/நொ (kg.m2s-1) வளைவுந்தத்தின் பரும அளவானது திணிவு (m), நடு விலகுதொலைவின் இருமடி (r2), வளைந்தோட்ட விரைவு (v) ஆகியவற்றின் பெருக்குத்தொகை (mvr2) ஆகும்.