வியட்னாமிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வியட்னாமிய மொழி வியட்னாமின் தேசிய, உத்தியோகபூர்வ மொழி. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
வியட்நாமிய மொழி, ஆஸ்திரோஆசியாட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி.
இம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது லத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.