வில்லியம் தாம்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லார்டு கெல்வின் என்றழைக்கப்படும் வில்லியம் தாம்சன் (26 ஜூன் 1824 - 17 டிசம்பர் 1907) அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்னியல், வெப்பவியல் துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையில் தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவ பரிந்துரைத்து ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்க்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு லார்டு கெல்வின் என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.இயற்பியல்