வெப்பநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெப்பநிலை (Temperature) என்பது ஒரு பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதியின் இயற்பியல் இயல்பு ஆகும். அயலிலுள்ள ஒரு பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதியிலிருந்து, எடுத்துக்கொள்ளப்பட்ட பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதிக்கு, வெப்பம் உள்செல்லுமா அல்லது அதிலிருந்து வெளியேறுமா என்பதைத் தீர்மானிப்பது இந்த இயல்பாகும். இவ்வாறு வெப்ப ஓட்டம் நிகழாவிட்டால் அப் பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதி, அந்த வெப்பநிலையில், வெப்பச் சமநிலையில் உள்ளது எனப்படும். வெப்ப ஓட்டம் நிகழுமானால் அது வெப்பநிலை கூடிய இடத்திலிருந்து வெப்பநிலை குறைந்த இடம் நோக்கிய திசையில் இருக்கும்.