வேதியியற் தாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேதியியற் தாக்கம் (அல்லது இரசாயனத் தாக்கம், chemical reaction) எனப்படுவது வேதியியற் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வேறு வேதியியற் பொருட்களாக மாறும் செயற்பாடு ஆகும். வேதியியற் தாக்கங்களின் போது வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டுத் தொடக்கத்தில் இருந்த பொருட்களிலும் வேறான, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய வேதியியற் பொருட்கள் விளைவாகக் கிடைக்கின்றன.
பொதுவாக வேதியியற் சமன்பாடுகளின் அடிப்படையில் நோக்கும்போது, வேதியியற் தாக்கம் என்பதின் கருத்துரு, அடிப்படைத் துணிக்கைகள் மாற்றமுறுவதைக் குறித்தாலும், வேதியியற் பிணைப்புக்களின் உருவாக்கத்தையும், உடைவையும் ஏற்படுத்தும், இலத்திரன்களின் இடமாற்றமே தாக்கங்களின் அடிப்படையாக உள்ளது.
வேதியியற் தாக்கங்களை அடிப்படையில், ரீடொக்ஸ் தாக்கம் (redox reactions), அமிலம்சார் தாக்கம் (acid-base reactions) என இரண்டு வகைகளாகக் காணமுடியும். முதல் வகையில், தனி இலத்திரனின் இடமாற்றமும், இரண்டாவதில் இலத்திரன் இணைகளின் இடமாற்றமும் தொடர்புபட்டுள்ளன.