பயனர் பேச்சு:Paramatamil
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், Paramatamil!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Natkeeran 20:00, 2 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] கட்டுரை உருவாக்கங்கள் மிக நன்று
உங்களுடைய கட்டுரை உருவாக்கங்கள் மிக நன்று. கணிதத்தை நன்றாக தமிழில் தந்துள்ளீர்கள். நன்றி. --Natkeeran 15:01, 29 ஏப்ரல் 2006 (UTC)
விக்கிபீடியா உதவி பக்கமான ஒழுங்குப் பிரழ்வுகள் பக்கத்தை நீங்கள் தமிழ் மணம் கமழ மொழி மாற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. உங்கள் கட்டுரை பங்களிப்புகளும் நன்று.--ரவி 14:21, 30 ஏப்ரல் 2006 (UTC)
நல்ல அருமையான நடையுடனும், மொழியாண்மையுடனும் எழுதுகிறீர்கள். வளர்க உம் பணி. -- Sundar \பேச்சு 12:18, 10 மே 2006 (UTC)
[தொகு] வைகை ஆறு
வைகை ஆறு கட்டுரையில் நீங்கள் இணைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்து புல்லரித்துப் போனேன். சோழவந்தான் அருகே ஆற்றங்கரையில்தான் நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த வீடு உள்ளது. இளவயதில் ஆற்றில் விளையாடியது, மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டது (வைரமுத்துவின் வரிகள்) அனைத்தும் நினைவிற்கு வருகின்றன. :) -- Sundar \பேச்சு 06:35, 26 ஜூலை 2006 (UTC)
[தொகு] வாக்குச் சேகரிப்பு :)
தமிழ்ச்செல்வம்,
- தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
- ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:13, 2 ஆகஸ்ட் 2006 (UTC)