பயனர்:Trengarasu/புவியியல் அமைவு பரிசோதனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அயகம | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
அமைவிடம் | 6.6406° N 80.3097° E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 283 மீட்டர் |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) |
28491 |
பிரதேச சபை தலைவர் |
அயகம இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும். . இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] புவியியலும் காலநிலையும்
அயகம சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 283 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
[தொகு] மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 28491 | 24839 | 741 | 2840 | 22 | 0 | 49 |
கிராமம் | 25030 | 24233 | 400 | 356 | 10 | 0 | 25 |
தோட்டப்புறம் | 3461 | 606 | 341 | 2484 | 12 | 0 | 21 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 28491 | 24962 | 3302 | 51 | 95 | 54 | 27 |
கிராமம் | 25030 | 24321 | 603 | 30 | 15 | 37 | 24 |
தோட்டப்புறம் | 3461 | 641 | 2699 | 21 | 80 | 17 | 3 |
[தொகு] கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.