இணையத்தளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுவரில்லாமல் சித்திரம் இல்லை என்பதுபோல இணையத்தளம் இல்லாத இணையமும் இல்லை.
இணையத்தளத்தை ஒரு நாட்டுக்கு உரிய தள வழங்கிகளின் மூலமாகவோ அல்லது பொது தள வழங்கிகளின் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வி, தகவல்தொடர்பு, வணிகம், தொழில்துறை மற்றும் ஆன்மீகம் போன்றவற்றின் மேம்பாட்டிற்காக இணையத்தளத்தை பயன்படுத்த முடியும். தூரநோக்கோடு சிந்தித்து ஆரம்பிக்கப்படாத இணையத்தளங்கள் வந்த வேகத்தில் விலாசமில்லாமல் போவதும் உண்டு.
ஒரு இணையத்தளம் புதுப்புது தொழில்நுட்பங்களையும், சேவைகளையும் வழங்கி மக்களிடையே நிலைத்து நிற்க விரும்புகிறது.
தமிழ் இணையதள வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது யுனிகோடு என்ற சர்வதேச குறியீடு முறையாகும். யுனிகோடு இணையத்தளங்களால் எழுத்துரு பிரச்சினைகள் தவிர்க்கமுடியும்.
உலகம் முழுவதையும் விரல்நுனியால் இணைக்கும் இணையத்தில், அதிகமாகத் தேடப்படுவது பாலினத் தொடர்பான இணையத்தளங்களே என்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
இணையத்தள வசதியினால் சிறு பிரச்சினைகள் தீர்க்கப்படுவதும் உண்டு. பெரிய பிரச்சினைகள் உருவாக்கப்படுவதும் உண்டு.
இணையத்தளத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை பலர் முன்வந்து தொகுப்பது குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்றாகும்.