இயல் எண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணிதத்தில், இயல் எண் என்பது முழு எண்களாகும். இயல் எண் வரிசைக்கு இரு வகையான வரைவிலக்கணம் உண்டு. முதல் வரிசை நேர்ம முழு எண்களான (1, 2, 3, 4, ...) ஆகும். இன்னொரு விதமாகவும் வரையறுக்கப்படுகிறது. இதனை எதிர்ம எண் அல்லா முழு என்கள் வரிசை எனலாம். எனவே இவை (0, 1, 2, 3, 4, ...) ஆகும். முந்தைய வரைவிலக்கணம் எண் கோட்பாட்டிலும், பிந்தையது கணக் கோட்பாட்டிலும் கணிணி அறிவியலிலும் விரும்பப்படுகிறது.
இயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. சில பொருட்களை எண்ண பயன்படுத்தலாம் ("தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன"), மேலும் எண்ணிக்கை அளவில் எத்தனையாவது என்று முறைமையைக் காட்டலாம் ( "சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்")
எண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் வகுமைப் பண்புகள் பற்றியும், பகா எண்கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.