தங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தங்கம் என்பது ஒரு உலோகமாகும். இது Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இது மென்மையான, மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். இது ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.