கலைக்களஞ்சியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலைக்களஞ்சியம் (Encyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ குறிப்பிட்ட துறைக்கென பிரத்யேகமாகவோ ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.