குடைவரை கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரிய மலைகளை (வரைகளை) குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல்வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி. மு 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில் அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.
[தொகு] தமிழ்நாட்டுக் குடைவரைகள்
[தொகு] பல்லவர்காலம்
- மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்
- பல்லாவரம் குடைவரை
- மாமண்டூர் உருத்திரவாலீஸ்வரம்
- மாமண்டூர் திருமால் குடைவரை
- குரங்கணில்முட்டம் குடைவரை
- வல்லம் வசந்தீஸ்வரம்
- மகேந்திரவாடி குடைவரை
- தளவானூர் சத்துருமல்லேசுவர் ஆலயம்
- திருச்சிராப்பள்ளி குடைவரை
- நார்த்தாமலை குடைவரை
- குடுமியான்மலை குடைவரை
- திருமெய்யம் குடைவரை
- சீயமங்கலம் திருத்தூணாண்டார் கோயில்
- விளாப்பாக்கம் குடைவரை
- மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்
- மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்
- மாமல்லபுரம் கோனேரி மண்டபம்
- மாமல்லபுரம் வராக மண்டபம்
- மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
- மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்
- மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை
- மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்
- மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்
- மாமல்லபுரம் பரமேஸ்வரவராக விஷ்ணுகிருகம்
- மாமல்லபுரம் இராமானுஜ மண்டபம்
- மாமல்லபுரம் சிறிய யாளி மண்டபம்
- சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்
- சாளுவன்குப்பம் புலிக்குடைவரை