ஹேகியா சோபியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹேகியா சோபியா துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய ஓதொடொக்ஸ் பிரிவினரின் தேவாலயமாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. கொன்ஸ்தந்தினோப்பிள் வீழ்ச்சியுற்றபோது, இத் தேவாலயத்தை ஓட்டோமான்கள் கைப்பற்றியது, கிறிஸ்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய துன்பியல் நிகழ்வு எனக் கிரேக்க ஓதோடொக்ஸ் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.