ஜாவாஸ்கிரிப்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜாவாஸ்கிரிப்டு என்பது நெற்ஸ்கேப் (en:Netscape) நிறுவனத்தாரால் இணையப் பக்கங்களை உருவாக்க உதவும் கணினி நிரலாக்க மொழியாகும். ஜாவாஸ்கிரிட் ஆனது ஜாவாவுடன் பெயரளவில் நெருங்கியிருந்தாலும் நிரலாக்கலில் ஓரளவே நெருங்கியுள்ளன. ஜாவா ஸ்கிரிப்டானது சண் மைக்ரோசிஸ்டத்தின் வர்தகப் பெயராகும். பிற்காலத்தில் மைக்ரோசாப்ட் ஜாவாஸ்கிரிப்டிற்குப் போட்டியாக ஜெஸ்கிரிப்ட் என்ற நிரலாக்க மொழியை உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
ஆரமபத்தில் நெட்ஸ்கேப் நிறுவனத்தால் லைட் ஸ்கிர்பிட் என அறிமுகம் செய்யப்பட்ட மொழியையே ஜாவாஸ்கிரிப்பட என பெயர் மாற்றப்பட்டு அறிமுகப் படுத்தப் பட்டது. இந்தப் பெயரின் தெரிவே இன்னளவும் பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்தது.
[தொகு] ஜாவாஸ்கிரிப்டும் ஜாவாவும்
இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்ஸ்கேப் நிறுவனமும் தமது நெட்கேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் ஸ்கிரிப்ட் என்ற மொழியை ஜாவாஸ்கிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] பாவனை
- பயனர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள் சரியா என்பதை உலாவியூடாகவே சரிபாத்துப் பின்னர் வழங்கியில்(சேவரில்) சேமிக்கும் வசதி.
- டயலாக் பாக்ஸ் மற்றும் பொப்பப் விண்டோக்களை உருவாக்குதல்.
- பயனர்களின் மவுஸ் அசைவுகளைகளிற்கு எடுத்துக் காட்டாக படங்களிற்கு மேலாக மவுஸ் செல்லும் போது படங்களை மாற்றுதல்
[தொகு] ஜாவாஸ்கிரிப்டில் தமிழ்
ஜாவாஸ்கிரிப்டில் தமிழைப் பயன்படுத்த தமிழ் செய்தியை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து பின்னர் கோப்பை UTF-8 முறையில் சேமிக்க வேண்டும் மாறாக கோப்பை யுனிக்கோட்டாக சேமித்தால் இண்டநெட் எக்ஸ்புளோளர் அச்செய்தியைக் காட்டுமெனினும் பயர் பாக்ஸ் உலாவி செய்தியெதனையும் காட்டாது.
<script type="text/javascript"> alert('சோதனைச் செய்தி') </script>