டும் டும் டும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டும் டும் டும் | |
இயக்குனர் | அழகப் பெருமாள் |
---|---|
தயாரிப்பாளர் | மெட்ராஸ் டாக்கீஸ் |
நடிப்பு | மாதவன் யோதிகா விவேக் மணிவண்ணன் கல்பனா முரளி |
இசையமைப்பு | கார்த்திக் ராஜா |
வெளியீடு | 2001 |
மொழி | தமிழ் |
டும் டும் டும் (2001) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.அழகப் பெரிமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், யோதிகா,விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நகரவாசியான ஆதி (மாதவன்) தனது பெற்றோர்களுக்கு நலமில்லை என்ற பொய்யான காரணத்தைக் காட்டி அவனின் பெற்றோர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு அழைக்கப்படுகின்றான்.பதற்றுடன் வரும் அவனும் பின்னர் தனக்கு பெண் பார்த்து வைத்திருப்பதைத் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டேன் என்பதனையும் தெரிந்து கொள்கின்றான்.கிராமத்துப் பெண்ணான கங்கா (ஜோதிகா) மற்றும் ஆதி இருவரும் ஆரம்ப்பத்தில் திருமணம் செய்வதற்கு மறுக்கின்றார்.பின்னர் இருவரும் காதலிப்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு] பாடல்கள்
- தேசிங்கு ராஜா - ஹரிஸ் ராகவேந்திரா, சுஜாதா
- சுற்றும் பூமி - ஹரினி
- உன் பேரை சொன்னாலே - உன்னிகிருஷ்ணன், சாதனா சர்க்கம்
- ரகசியமாய் - ஹரிகரன், சாதனா சர்க்கம், ராமநாதன்
- கிருஷ்ணா கிருஷ்ணா - ஹரிஸ் ராகவேந்திரா, கார்த்திக்
- அத்தான் வருவாக - மால்குடி சுபா, சித்ரா சிவராமன்
[தொகு] துணுக்குகள்
- இத்திரைப்படம் 105 நாட்கள் தொடர்ந்து திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.