தர்மரத்தினம் சிவராம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() தராக்கி சிவராம் |
|
புனைப்பெயர்: | தராக்கி |
---|---|
பிறப்பு: | ஆகஸ்ட் 11, 1959 |
இறப்பு: | ஏப்ரல் 28, 2005) கொழும்பு இலங்கை |
தன்மையாளர்: | எழுத்தாளர், பத்திரிகையாளார் |
தேசியம்: | இலங்கையர் |
வலைத்தளம்: | www.tamilnet.com |
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையை இலக்கு வைத்தே 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டுள்ளார்.[1].
[தொகு] வரலாறு
இவர் மட்டகளப்பில் பிறந்து ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில் கற்றார் அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவான்ஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக் கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழத்தில் அனுமதிபெற்ற போதும் 1983 களில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் பல்கலைக் கழகக் கல்வியைக் கைவிட்டார்.
[தொகு] நூலாக வாழ்க்கை வரலாறு
தர்மரத்தினம் சிவராமின் வாழ்க்கைக் கதை சிவராம் புகட்டும் அரசியல் - ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும் என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் துணைப் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரினால் (Mark P. Whittaker) எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை, இலண்டனில் உள்ள Pluto Press பதிப்பகம் வெளியிட்டுள்ளது[2].
இலங்கையில் மனித உரிமைகள்
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் |
---|
ஐயாத்துரை நடேசன் • பலனதராஜா ஐயர் • கே. எஸ். ராஜா • மயில்வாகனம் நிமலராஜன் • ரிச்சர்ட் டி சொய்சா • தேவிஸ் குருகே • தர்மரத்தினம் சிவராம் • ரேலங்கி செல்வராஜா • நடராஜா அற்புதராஜா • ஐ. சண்முகலிங்கம் • சுப்ரமணியம் சுகிர்தராஜன் • சின்னத்தம்பி சிவமகாராஜா
|
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Whitaker, Mark. "Sivaram Dharmeratnam: A Journalist’s life", தமிழ் நெட், 2005-04-29. 2006-10-02 அன்று தகவல் பெறப்பட்டது..
- ↑ சிவராமின் வாழ்க்கைக் கதை நூலாக வெளிவந்துள்ளது