நுவரெலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது ஒளியையும் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் குடியேற்றவாதக் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | ![]() |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |