பதுளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பதுளை | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
அமைவிடம் | 6.984° N 81.056° E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 680 மீட்டர் |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
69971 - 40920 |
பதுளை இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும்.பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணதினதும் தலைநகரமுமாகும்.பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] புவியியலும் காலநிலையும்
பதுளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 680 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2000-2500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
[தொகு] மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 69971 | 48939 | 3183 | 10921 | 6083 | 135 | 710 |
நகரம் | 40920 | 29960 | 2717 | 1989 | 5519 | 89 | 537 |
கிராமம் | 19790 | 18269 | 359 | 515 | 547 | 46 | 54 |
தோட்டப்புறம் | 9261 | 710 | 107 | 8417 | 17 | 0 | 15 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 69971 | 48191 | 12885 | 6807 | 1320 | 738 | 30 |
நகரம் | 40920 | 29385 | 4051 | 6186 | 878 | 395 | 25 |
கிராமம் | 19790 | 18120 | 752 | 594 | 182 | 142 | 0 |
தோட்டப்புறம் | 9261 | 686 | 8082 | 27 | 260 | 201 | 5 |
[தொகு] கைத்தொழில்
இங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைபெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
[தொகு] குறிப்புகள்
[தொகு] உசாத்துணைகள்
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | ![]() |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |