பஃறொடை வெண்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படும் என்பதும் சிலரது கருத்து.
நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களில் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்னும் வேறுபாடுகள் இருப்பதுபோல், பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள்.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
கீழேயுள்ளது ஆசாரக்கோவை என்னும் நூலில் வருகின்ற ஒரு பஃறொடை வெண்பாவாகும். இது ஐந்து அடிகளால் அமைந்துள்ளது.
- முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
- துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
- கானம் தமியர் இயங்கார் துளியஃகி
- நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
- தொல்வரவின் தீர்ந்த தொழில்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- குறள் வெண்பா
- சிந்தியல் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- சவலை வெண்பா