புதுமைப்பித்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புதுமைப்பித்தன் (Pudhumaipithan) என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.தொடக்கக் கல்வியைச் செஞ்சி,திண்டிவனம்,கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார்.தாசில்தாராக பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லைக் கல்லூரியில் பி.ஏ பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.
இவரது முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்" காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகளும் பிரசுரமாகத் துவங்கின. இந்த காலக் கட்டதில் அவர் சென்னைக்குக் குடிப்பெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. சென்னையில் இவர் சில ஆண்டுகள் திணமனியிலும்,பின்பு தினசரியிலும் பணிபுரிந்தார்.
இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார்.ஜெமினி நிறுவனத்தின் "அவ்வை" மற்றும் "காமவல்லி" படங்களில் பணிப் புரிந்தார்.பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கினார்.எம்.கே.டி பாகவதரின் "ராஜமுக்தி" திரைப் படத்திற்காக புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி 5 மே 1948-இல் காலமானார்.
[தொகு] புதுமைப்பித்தனின் சில படைப்புகள்
- கல்யாணி
- சிற்பியின் நகரம்
- காஞ்சனை
- வழி
- புதிய கூண்டு
- சுப்பையாப் பிள்ளையினை கதைகள்
- வேதாளம் சொன்ன கதைகள்
- ஒரு நாள் கழிந்தது
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- காலனும் கிழவியும்
- பொன்னகரம்
- தெரு விளக்கு
[தொகு] புனைப்பெயர்கள்
[தொகு] தழுவல் கதைகளும் சர்ச்சைகளும்
[தொகு] சிந்தனைகள்
என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும்.
..இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும்,அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்களாம்.உண்மை அதுவல்ல;சுமார் இருநூறு வருடங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம்.சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்காவும்கூசிகிறோம்.அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாக சுற்றி வளைத்த்ச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.குரூரமே அவதாரமான ராவணனையும்,ரத்தக் களறியையும்,மனக் குரூபங்களையும்,விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால்,ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? (புதுமைப்பித்தன் கட்டுரைகள்,1954)
சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து. (நம்பிக்கை)
இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்! (பொன்னகரம்)