காச நோய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது,
பொருளடக்கம் |
[தொகு] அறிகுறிகள்
- உடற் சோர்வு
- உணவு விருப்பின்மை
- நீடித்த காய்ச்சலும் இருமலும்
- மஞ்சட் சளி
- நெஞ்சு நோவு
- அடிக்கடி தடிமன்
- சிலரில் இரவுநேர அதிக வியர்வை
- இருமலுடன் அதிகளவு குருதி
[தொகு] சிகிச்சை
ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
[தொகு] பயன்படும் மருந்துகள்
- றிபம்பிசின் (Rifampicin)
- ஐசோனியாசிட் (Isoniasid)
- பைரமினமைட் (Pyriminamide)
- எதம்பியூட்டோல் (Ethambutol)
[தொகு] காசநோய் தவிர்ப்பு
- BCG தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.
- மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்
- சன நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.
- போசாக்குக் குறைபாடு இலகுவில் இந்நோய் தொற்ற வழிவகுக்கும்
- பசுப்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும்.