பெலிஸ்த்திய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெலிஸ்த்திய | ||
---|---|---|
நாடுகள்: | முன்னாள் தென்மேற்கு இசுரேல் | |
மொழி அழிவு: | கிமு 5வது நூற்றாண்டு | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் வடமேற்கு செமிடிக் கானானிய பெலிஸ்த்திய |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | இல்லை | |
ISO 639-2: | sem | |
ISO/FDIS 639-3: | — |
பெலிஸ்திய மொழி அல்லது பிலிஸ்திய மொழி முன்னாள் கானான் நாட்டின் தென்மேற்கு கரையோரத்தில் பேசப்பட்ட மொழியாகும். இம்மொழி பற்றிய அறிவு மிக குறுகியதாகும். விவிலியத்தில் ஆசோத் என இம்மொழி குறிக்கப்படுகிறது. மேலும் தாவிது சிறுவனாக இருக்கும் போது போரில் வெற்றிக் கொண்ட கோலியாத் ஒரு பெலிஸ்தியனாவான். பெலிஸ்த்திய மொழியை வேறு மொழிகளுடன் ஒப்பிட போதுமான அளவு ஆதாரங்கள் இல்லை. இம்மொழி கிரேக்க மொழியுடன் தொடர்புடையதாக பெலிஸ்தரின் வரலாற்றை ஆராயுபவர்களின் கருத்தாகும்.
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.