பேளூர், கர்நாடகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேளூர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் ஹோய்சாலர்களின் தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹஸ்ஸன் மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் வேலபுரி என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இது ஹோய்சாலர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை.