முத்தையா முரளிதரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்தையா முரளிதரன் இலங்கை (SL) |
||
![]() |
||
துடுப்பாட்ட வகை | வலதுகை மட்டையாளர் | |
பந்துவீச்சு வகை | வலதுகை ஓவ் (Off) சுழற்பந்துவீச்சு | |
தேர்வு | ஒ.ப.து | |
---|---|---|
ஆட்டங்கள் | 110 | 286 |
ஓட்டங்கள் | 1117 | 488 |
ஓட்ட சராசரி | 11.75 | 5.81 |
100கள்/50கள் | -/1 | -/- |
அதிக ஓட்டங்கள் | 67 | 27 |
பந்துவீச்சுகள் | 36705 | 15646 |
இலக்குகள் | 674 | 433 |
பந்துவீச்சு சராசரி | 21.73 | 23.08 |
சுற்றில் 5 இலக்குகள் |
57 | 8 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் |
19 | பொருந்தாது |
சிறந்த பந்துவீச்சு | 9/51 | 7/30 |
பிடிகள்/ ஸ்டம்பிங்குகள் |
59/- | 113/- |
பெப்ரவரி 13, 2007 நிலவரப்படி ஆதாரம்: Cricinfo.com |
முத்தையா முரளிதரன் (பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். இவரது பந்துவீசின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார் [1].
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியை திருமணம் செய்துக்கொண்டார்[2].
பொருளடக்கம் |
[தொகு] ஆரம்ப வாழ்க்கை
சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.
[தொகு] துடுப்பாட்ட வீரராக
இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.
துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 650ற்கும் அதிகமான தேர்வு இலக்குகளையும் 400ற்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.
[தொகு] உலகசாதனைகளும் அடைவுகளும்
முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:
- தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1106 இலக்குகள் ஜனவரி 9 2007இன் படி)[3]
- தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (19) [4]
- தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (57) [5]
- ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
- தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [6]
- தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [7]
- வேகமான 350, 400, 450, 500, 550, 600 and 650 தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.[8]
- நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.[9]
- தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (150) [10] [11]
- அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(59) [12]
[தொகு] ஆதாரங்கள்
- ↑ [1]
- ↑ [2]
- ↑ http://content-usa.cricinfo.com/srilanka/content/current/player/49636.html
- ↑ [3]
- ↑ [4]
- ↑ [5]
- ↑ [6]
- ↑ [7][8][9][10][11][12][13]
- ↑ [14]
- ↑ [15]
- ↑ Lynch, Steven (2005-07-11). Most ODIs before a Test, and double figures all in a row. Cricinfo. இணைப்பு 2007-01-04 அன்று அணுகப்பட்டது.
- ↑ [16]
[தொகு] வெளி இணைப்புகள்
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி | ![]() |
|
ஜயவர்தன | அத்தப்பத்து | ஜயசூரிய | தரங்க | சங்கக்கார | டில்ஷான் | ஆர்னோல்ட் | சில்வா | மவுரூவ் | வாஸ் | பர்னாட்டோ | மாலிங்க | குலசேகர | முரளிதரன் | பண்டார | பயிற்றுனர் மூடி |