மோவாபிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மோவாபிய | ||
---|---|---|
நாடுகள்: | வடமேற்கு ஜோர்தான் | |
மொழி அழிவு: | கிமு 5வது நூற்றாண்டு | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் வடமேற்கு கானானிய மோவாபிய |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | இல்லை | |
ISO 639-2: | sem | |
ISO/FDIS 639-3: | obm |
மோவாபிய மொழி அல்லது மோவாப் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். இது தற்போதைய யோர்தான் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் (அன்றைய மோவாப்) கிமு 1வது ஆயிரவாண்டின் முதல் பகுதியில் பேசப்பட்ட மொழியாகும். மோவாபிய மொழி பற்றிய ஆய்வுகள் மோவப் கல்வெட்டு மற்றும் எல்-கர்க் எழுத்துக்கள்[1]என்பவற்றை கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இவை இம்மொழியானது விவிலிய எபிரேய மொழியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த்தை காட்டுகிறது. சில சிறிய வேறுபாடுகளை மட்டுமே ஆய்வாளகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.