வர்த்தமானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வர்த்தமானி (Gazzette) அல்லது அரச வர்த்தமானி என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் கஸெட் அல்லது கெஸட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது மார்ச் 15, 1802 இல் வெளிவிடப்பட்டதுடன் இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தபட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது [1]. இது சிங்களம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.
[தொகு] உசாத்துணைகள்
- ↑ வர்த்தமானி 200 ஆண்டு நிறைவில் அணுகப்பட்டது 9 பெப்ரவரி, 2007 (ஆங்கிலத்தில்)