வில்லியம் ஷேக்ஸ்பியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஏப்ரல் 26, 1564 - ஏப்ரல் 23, 1616 - திகதிகள் ஜூலியான் நாட்காட்டிப்படி) ஆங்கில நாடக எழுத்தாளரும் கவிதையாசிரியரும் ஆவார். ஆங்கில இலக்கிய உலகில் ஓர் சிறந்த நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படுகின்றார். இவர் 38 நாடங்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் புகழானது இவரின் இறப்பின் பின்னர் அதிகரித்தது.
இவரது பங்களிப்பின் காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியாதென்னினும் அநேகமான ஆக்கங்கள் 1586 இற்கும் 1616 இற்குமிடையிலான காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது. நகைச்சுவை நாடகங்களையும் துன்பியல் நாடகங்களையும் வழங்கியவர்களி இவர் மிகச்சிறந்தவராக விளங்கினார்
ஷேக்ஸ்பியரின் இலக்கிய ஆக்கங்கள் பரவலாக வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாடகங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடித்துக் காட்டப் படுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை
[தொகு] ஆரம்பவாழ்க்கை
வில்லியம் ஷேக்ஸ்பியர் ஸ்ட்ராட்ஃபோர்டு-அப்பான்-ஏவான் (Stratford-upon-Avon) என்னும் இடத்தில் ஏப்ரல் 1564ல் ஜான் ஷேக்ஸ்பியர்-மேரி ஆர்டென் ஆகியோருக்கு மகனாப் பிறந்தார். இவர் ஹென்லி வீதியில் உள்ள இவருடைய குடும்பத்தாரின் வீட்டிலேயே பிறந்தார்.
ஷேக்ஸ்பியர் அவர்கள் ஸ்ட்ராட்ஃபோர்டிலுள்ள (Stratford) 6ஆம் எட்வார்ட் அரசரின் இலக்கணப் பாடசாலையில் அநேகமாககக் கல்வி கற்றிருக்க வேண்டும். எலிசபெத் காலத்தில் இருந்த பாடசாலைகளின் தரங்கள் சீராக இல்லாவிட்டாலும் பாடசாலை அநேகமாக இலத்தீன் இலக்கியம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றைச் ஆழக் கற்பித்திருக்கவேண்டும். முக்கியமான அரச அலுவலரின் மகனாகிய இவர் இலவசமாகக் கற்றிருக்கும் வாய்ப்புள்ளதால் அநேகமாக இப்பாடசாலையில் படித்திருக்க வேண்டும். இவர் தம் 18 ஆவது வயதில் 26 வயதுள்ள மூன்றுமாதக் கர்பமாயுள்ள ஆன் ஹாத்வே அவர்களை நவம்பர் 28, 1582ல் திருமணம் செய்தார். திருமணத்தின் பின்னர் இலண்டன் வந்துசேர்ந்தார்
[தொகு] இலண்டனில் நாடக எழுத்தாளராக
[தொகு] பிற்கால வாழ்க்கை
ஷேக்ஸ்பியரின் இறுதி இரண்டு நாடகங்களும் 1613இல் எழுதப்பட்டன. இவர் 23 ஏப்ரல் 1616 ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஷேக்பியர் புனித திரித்துவத் தேவாயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
[தொகு] பங்களிப்புக்கள்
[தொகு] நாடகங்கள்
இவரால் எழுதப்பட்ட நாடங்களின் எண்ணிக்கை பெரிய புகழை ஆங்கில மொழியிலும் மேலை நாடுகளின் இலக்கியத்திலும் ஏற்படுத்தியது. இவர் துன்பியல், வரலாறு, நகைச்சுவை, காதல் நாடகங்களை எழுதினார். இவை பெரும்பாலும் மொழிபெயர்க்கப் பட்டதோடு அவை இன்றும் நடித்தும் காட்டப் படுகின்றன.