வெயில் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெயில், 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, ஷ்ரேயா ரெட்டி, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.