சுமேரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுமேரியா தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும்.( இன்றைய தென் ஈராக்) இது கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3வது ஆயிரவாண்டில் பபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது. சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல அம்சங்களையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது."சுமேரியர்" என்ற சொல் சுமேரிய மொழி பேசியவர்களை குறிக்கிறது.
[தொகு] பின்னணி
சுமேரியர் என்ற சொல் அக்காத் மக்களால் முதலில் வழங்கப்பட்டது. சுமேரியர் தங்களை "கருந்தலை மக்கள்" என அழைத்தனர். தங்களின் பிரதேசத்தை "நாகரிக பிரபுக்களின் நாடு" என அழைத்தனர். இவர்களின் மொழி இப்பிரதேசத்து மொழிகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டது எனவே ஆய்வாளகள் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என நம்புகின்றனர். ஆனாலும் தொல்பொருள் சான்றுகள் சுமேரியர் இப்பிரதேசங்களில் யூபித் காலப்பகுதி (கி.மு. 5200-4500 அல்லது கி.மு. 6090-5429) தொடக்கம் தெற்கு மொசொப்பெத்தேமியாவில் இருந்ததை சுட்டுகிறது. இவர்கள் யூபிரிடிஸ் டைகிரிடிஸ் நதிகளால் படிந்த செழுமையான வண்டல் நிலங்களில் விவிசாயம் மேற்கொண்டனர்.
இப்பிரதேசம் வருடத்துக்கு சுமார் 130 மி.மீ. மழைவீழ்ச்சியே பெறுகின்றது. எனவே யூபிரிடிஸ் டைகிரிஸ் நதிகளை வருடம் முழுவதுக்குமான நீர்பாசனத்துக்கு பயன்படுத்துவது முக்கியமாகும். சுமேரிய மொழியில் நீர்பாசனத்துடன் தொடர்புடைய பல சொற்கள் காணப்படுகின்றன. இதன் மூலம், வடக்கில் விவசாயத்தில் தேர்ச்சி பெற்ற விவசாயிகள் குழுவே தெற்கு மொசொப்பொத்தேமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது என்பது தெளிவாகிறது.