இயற்கை எண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்கை எண் என்பது நேர் நிறையெண் அல்லது மறையல்லாத நிறையெண் என்பது கணித வரைவிலக்கணமாகும். ஒன்றிலிருந்து துவங்கி ஒவ்வொன்றாக கூட்டுவதனால் வரும் எண்கள் இயற்கை எண்கள் ஆவன.
(எ-கா) ஒன்று, இரண்டு முதலியன.
இயற்கை எண்களின் இரு பிரதான பயன்பாடுகள் எண்ணுதலும் வரிசைப்படுத்துதலும் ஆகும். எண்ணுவதற்குப் பயன்பட்ட சொற்களிலிருந்தே இயற்கை எண்கள் தோன்றின.